தரம் 11இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவியே குழந்தையை பிரசவித்துள்ளார்.
குளியலறையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு சிறுமியின் தாய் குளியலறைக்குள் சென்று பார்த்தபோது தனது மகளுக்கு குழந்தை பிறந்துள்ளமையினை தாய் அறிந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
