பன்விலை ஆடை தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 பெண்கள் உட்பட 23 பேர் குறித்த பஸ்ஸில் பயணித்துள்ளனர். மடுல்கலை ஆடை தொழிற்சாலைக்கு உனனகலை பகுதியிலிருந்து ஊழியர்களை ஏற்றிச் செல்லும்போது பஸ் கவிழ்ந்துள்ளது.
இதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
