இலங்கைக்கு விஜயம் மேற்க்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசை சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில்தொண்டமான், பொதுச்செயலாளரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன், இ.தொ.கா சட்ட பிரிவு பொறுப்பாளர் மாரிமுத்து, இ.தொ.காவின் ஆலோசகர் மதியுகராஜா, சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இச்சந்திப்பில் இலங்கைக்கு இந்தியாவின் உதவிகள் பற்றியும், மலையக மக்களுடைய பிரச்சனைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
