யா/ மட்டுவில் தெற்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி இன்று (20) இடம்பெற்றது.
பாடசாலை முதல்வர் திருமதி.தயாநிதி ஜீவகுமார் தலைமையில் பாடசாலை மைதானத்தில் பி.ப 2.00 மணியளவில் ஆரம்பமானது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தென்மராட்சி கல்வி வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் நடராசா ஶ்ரீகாந்தா கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினராக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் கனகலிங்கம் ஹரிசங்கர், கெளரவ விருந்தினராக பழைய மாணவர் குணரத்தினம் குகநாதன் (சுவிஸ்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்புற இடம்பெற்றதுடன், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
