உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வவுனியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன இன்று (20) வேட்புமனுவை தாக்கல் செய்தது.
கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான
கே.காதர் மஸ்தானின் தலைமையில் வேட்பு மனுவை கையளித்தனர்.
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை , வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய இரு உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காகவே இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
