மேடம் – தொழிலை விருத்தி செய்ய நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும்.
பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
இடபம் – மதியம் வரை உங்கள் முயற்சி இழுபறியாகும். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். மதியம் வரை இருந்து வந்த நெருக்கடி விலகும்.
மிதுனம் – மதியத்திற்கு மேல் உங்கள் முயற்சியில் பின்னடைவு ஏற்படும். இனம்புரியாத குழப்பம் ஏற்படும்.
கவனமாக செயல்பட வேண்டிய நாள். எந்தவொரு செயலிலும் அவசரம் வேண்டாம்.
கடகம் – நண்பர்கள் ஆதரவுடன் நேற்றைய பிரச்னை ஒன்றிற்கு தீர்வு காண்பீர்கள். உறவினர் ஒருவரிடம் ஏற்பட்ட பிரச்னையை பேசி தீர்ப்பீர்கள். நிம்மதியான நாள்.
சிம்மம் – துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பகைவர்கள் விலகுவர். உடல் நிலையில் இருந்து வந்த சங்கடம் விலகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
கன்னி – உங்கள் முயற்சியில் தடைகளை சந்தித்தாலும் போராடி வெல்வீர்கள். நிதிநிலை உயரும்.விலகிச்சென்ற உறவினர் விரும்பி வருவர். உங்கள் செல்வாக்கு உயரும்.
துலாம் – உங்கள் தேவைகளில் ஒன்று நிறைவேறும்.
நண்பர்களிடம் விழிப்புணர்வு அவசியம். செலவு அதிகரிக்கும். அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கை தேவை.
விருச்சிகம் – வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பெரியோரின் ஆசி உண்டு.
சுபச்செலவு அதிகரிக்கும். ஒருசிலர் புதிய தொழிலுக்கான முயற்சியை மேற்கொள்வர்.
தனுசு – குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த குழப்பம் விலகும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பீர்.
மகரம் – நேற்றைய செயல் ஒன்றில் சங்கடம் தோன்றும். செலவு அதிகரிக்கும். உங்கள் மனதில் தடுமாற்றம் ஏற்பட்டு செயல்கள் தள்ளிப் போகும் நாள்.
கும்பம் – முயற்சி ஒன்று வெற்றியாகும். உங்கள் நிதிநிலை உயரும்நாள்.
பழைய முதலீட்டில் இருந்து வந்த லாபம் உண்டாகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
மீனம் – உங்கள் எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகத்தில் உண்டான நெருக்கடி இன்று சரியாகும். உங்களை மற்றவர் பாராட்டுவர்.
