உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை ஏற்கும் காலம் இன்றுடன் (21) நிறைவடைவதால் யாழ்ப்பாணத்தில் பல கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.
அவ்வகையில், இலங்கை தமிழரசுகட்சி (வீட்டுச்சின்னம்) யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட குழுவினரால் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி (மான் சின்னம்) யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (குத்துவிளக்குச் சின்னம்) நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரால் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியியினர் (வீணைச்சின்னம்) அமைச்சர் டக்கள்ஸ் தேவனாந்தா தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஐக்கிய தேசிய கட்சி (யானைச் சின்னம்) முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்தது.
ஐக்கிய மக்கள் சக்தியினர் (தொலைபேசி சின்னம்) எதிர்கட்ச்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பேச்சாளருமான உமாசந்திராப்பிரகாஷ் தலைமையில் வேட்புனு மனு தாக்கல் செய்தனர்.
ஶ்ரீ லங்கா சுகந்திரக்க கட்சி (கைச் சின்னம்) நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமநாதன் தலைமையிலான குழுவினரால் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அத்துடன், ஜங்கரநேசனின் தலைமையிலான சுயேட்சைக்குழுவினராலும் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நல்லூர் பிரதேசசபையில் மாத்திரமே போட்டியிடவுள்ளனர்.
தியாகி வாமதேவ தியாகேந்திரன் தலைமையிலான சுயேட்சைக் குழுவினரால் யாழ்.மாநகரசபையில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
