யாழ்.மாநகரசபைக்கான வேட்புமனுத்தாக்கலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பாக எம்.கே.சிவாஜிலிங்கம் முதன்மை வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அரசியல் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி சிவாஜிலிங்கம் முதன்மை வேட்பாளராக குத்துவிளக்குச் சின்னத்தில் களமிறங்குவதாக தெரிய வருகிறது.
அத்துடன், இலங்கை தமிழ் அரசுக் கட்சி (வீடு சின்னம்) சார்பில் முதல்வர் வேட்பாளராக எவரையும் நியமிக்கவில்லை எனவும் தேர்தலின் பின் தீர்மானிக்கப்படும் என்று தெரியவருகிறது.
தமிழ் மக்கள் கூட்டணி (மான் சின்னம்) சார்பில் முன்னாள் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
