சன்.டிவியில் சூப்பர்ஹிட் ஆன சீரியல் தான் ரோஜா. டிஆர்பியில் முன்னணியில் இருந்து வந்த அந்த தொடர் சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது.
அதற்கு பிறகு மீண்டும் சிபு சூர்யன் – பிரியங்கா நல்காரி ஜோடி இணைந்து நடிப்பார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் இதுவரை எந்த புது தொடரில் நடிக்க தொடங்கவில்லை.
இந்நிலையில், தற்போது பிரியங்கா நல்காரி ஜீ தமிழில் நடிக்க தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சீதா ராமன் என்ற புது தொடரில் தான் அவர் ஹீரோயினாக நடிக்கிறாராம். இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
