வடமராட்சி கிழக்கு – உடுத்துறைப் பகுதியில் இ.போ.ச பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று (22) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே படுகாயமடைந்த நிலையில், அப்பகுதியில் நின்றவர்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
