வெலிகம – பொல்வத்த பகுதியில் முச்சக்கர புகையிரதத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
