கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோப்பாய் மத்தியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு (21) இராசா வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மெக்கானிக் தொழில் புரியும் குறித்த இளம் குடும்பஸ்தரின் வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் துரத்தி துரத்தி அவரை அடித்துக்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரும்புக்கம்பி மற்றும் வாள்களைக் கொண்டே குறித்த கொலைவெறித் தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
30 வயதுடைய ர.அஜித் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
