புத்தளம் ரத்மல்யாய பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கற்பிட்டி – ஆலங்குடா பி முகாமைச் சேர்ந்த அசனார் லெப்பை பக்கீர் சாஹிப் மைமூன் (வயது 71) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
ரத்மல்யாய பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணிப்பதற்காக வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்த குறித்த வயோதிப பெண் மீது தனியார் பயணிகள் பஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
