மன்னார் பேசாலை கடற்கரையில் ஆண்ணொருவரின் சடலம் இன்று (23) மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் பேசாலை கடற்கரையில் இருந்து கடந்த 20 ஆம் திகதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவரே இன்று திங்கட்கிழமை(23) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட மீனவர் கிளிநொச்சிப் பகுதியை சேர்ந்த தற்போது பேசாலை பகுதியில் வசித்து வரும் இளம் குடும்பஸ்தரான 26 வயதுடைய கஸ்டார் அலெக்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சடலம் இன்று காலை பேசாலை மீன்பிடி துறைமுகத்திற்கு மேற்கு பக்கமாக கரை ஒதுங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவருடன் தொழிலுக்கு சென்ற இரண்டு நபர்கள் மற்றும் அவரது மனைவி, உறவினர், தொழில் உரிமையாளர் ஆகியோரிடம் பேசாலை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
