கிளிநொச்சியைச் சேர்ந்த ஐந்து தமிழர்கள் அகதிகளாக இன்று (23) படகு மூலம் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த ஐவர் நேற்று இரவு 10 மணிக்குப் புறப்பட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.
பாரதி புரத்தைச் சேர்ந்த 3 ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி ஆகியோரே சென்றுள்ளனர்.
தற்போது அவர்கள் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.