மேடம் – பண வரவில் இருந்து வந்த தடை விலகும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வழக்கமான செயல்களில் மட்டும் கவனம் செலுத்தவும்.
இடபம் – வியாபாரத்தில் ஏற்பட்ட தடை சரியாகும். நண்பர்களின் உதவி நன்மை தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த தகவல் வரும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும்.
மிதுனம் – நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். உங்களுடைய முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். நினைத்ததை செய்து முடிப்பீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும். இலாபகரமான நாள்.
கடகம் – சந்திராஷ்டமம் என்பதால் கவனமுடன் செயல்படுங்கள். சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.
நினைத்த செயல்களை நிறைவேற்ற முடியாமல் போகும். குழப்பம் அதிகரிக்கும்.
சிம்மம் – உங்கள் முயற்சி நிறைவேறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும்.
கன்னி – உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். உறவினரால் உண்டான பிரச்னை தீரும். குடும்பத்தில் ஒருவரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
துலாம் – குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள். நன்மையான நாள். திட்டமிட்டிருந்த பணியை ஒத்திப்போடுவீர்கள். வழக்கமான செயல்களில் நன்மை உண்டு.
விருச்சிகம் – உறவினர்கள் ஆதரவுடன் உங்கள் முயற்சி வெற்றி அடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழிலில் இருந்து வந்த தடை விலகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
தனுசு – சகோதரர்களுடன் ஏற்பட்ட பிரச்னை சரியாகும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.
மகரம் – குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். வருமானம் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். ஆரோக்யம் சீராகும். வரவேண்டிய பணம் வரும்.
கும்பம் – உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகுவர். நிம்மதியான நாள்.
குடும்பத்தில் வாக்குவாதம் உண்டாகும். உங்கள் எண்ணத்திற்கு மாறாக சில செயல் நடைபெறும்.
மீனம் – திடீர் செலவு ஏற்படும். மனதில் உண்டான சங்கடத்தை சரி செய்வீர்கள். குடும்பத்திற்காக செலவுகள் அதிகரிக்கும். உங்கள் தேவைகளில் நிறைவேறும்.