உள்ளூராட்சி சபைத் தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில், சாவகச்சேரி பிரதேசசபைக்குட்பட்ட மறவன்புலோ பகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர் மீதே தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தாக்குதலுக்குள்ளானவரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வேறு கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் தன்னைப் கலந்துரையாடுவதற்கு அழைத்த நிலையில், தான் கலந்துரையாடலுக்கு சென்ற கலந்துரையாடும் போதே தன் மீது தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக தாக்குதலுக்கு உள்ளானவர் தெரிவித்துள்ளார்.