கப்ரக வாகனத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு வாகனத்தைக் கடத்திச் சென்ற கும்பல் பொலிஸரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பளைக்குச் சென்று கொண்டிருந்த கப்ரக வாகனத்தை பெரிய பளைப்பகுதியில் வழிமறித்த மூன்று பேர் வாகனத்தினுள் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்க்கொண்டு வாகனத்தை கடத்திச் சென்றுள்ளனர்.
இத்தகவல் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட நிலையில், ஆனையிறவுப் பகுதியில் குறித்த வாகனத்தை பொலிஸார் மறித்தபோதும், கடத்தல் கும்பல் வாகனத்தை நிறுத்தாது சென்றுள்ளனர்.
இந்நிலையில், பொலிஸார் துரத்திச்சென்று வாகனத்தை மீட்டதுடன், வாகனத்தை கடத்திய மூவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 24, 30, 34 வயதுடையவர்கள் எனவும், மாங்குளம், பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.