சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் சந்திப்பகுதியில் பட்டப்பகலில் ரவுடிக்கும்பல் வாகனங்களால் மோதி வாள்வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் இன்று (24) பதிவாகியுள்ளது. ஆவா ரவுடிக்குழுவினரே மோதலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஒன்றில் வந்த ஆவா குழுவினரை ஆவா குழுவின் மற்றொரு குழுவினர் மகேந்திர வாகனத்தினால் மோதி தாக்குதலை மேற்க்கொண்டனர்.
இதன்போது காருக்குள் இருந்த நால்வர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தால் குறித்தபகுதியில் அமைதியின்மை காணப்பட்டதுடன், மக்கள் அச்சநிலையில் காணப்பட்டனர்.
