முன்னாள் காதலியின் அந்தரங்க படங்களை நண்பர்களுடன் பகிர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக மாணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகள் வீதியில் செல்லும் போது சில இளைஞர்கள் பாலியல் சேட்டையில் ஈடுபடுகின்றனர் என்று பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், பொலிஸார் பல்கலைக்கழக சூழலில் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் யாழ். பல்கலைக்கழக விடுதியின் முன்பாக நின்ற இருவரை பொலிஸார் பிடித்து அவர்களின் கைபேசிகளை பரிசோதித்தனர்.
இதன் போது ஒருவர் பெண் ஒருவரின் அந்தரங்கப் படங்களை நண்பர்களுடன் பகிர்ந்திருந்தமை கண்டறியப்பட்டது.
பொலிஸாரின் விசாரணையில் அது அவரின் முன்னாள் காதலி என்றும் இணையவழி உரையாடலின் போது காதலியின் அந்தரங்க காட்சிகளை பதிவு செய்து வைத்திருந்ததாகவும் காதல் உறவு முறிந்ததும் அந்தக் காட்சிகளை நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
