யாழ்ப்பாணம் விமான நிலைய விஸ்தரிப்புக்கு சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான நட்ட ஈட்டு தொகை வழங்குவதற்கான பதிவு செய்யும் செயற்பாடு இன்று (26) தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
காணி உறுதிப் பத்திரம், தோம்பு, வங்கி கணக்கு புத்தகம், தத்துவ உரித்தாளர் சத்தியக்கடுதாசி முடித்த படிவம் , தேசிய அடையாள அட்டை என்பவற்றுடன் வருகை தந்து குறித்த காணி உரிமையாளர்கள் பதிவு செய்ய முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
J – 246 , J – 256, J – 240 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள்
இவற்றுள் அடங்குகின்றன.
மேலும் குறித்த காணி உரிமையாளர்களுக்கான கடிதமும் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
