மேடம் – முயற்சிகளில் தடைகள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். செயல்களில் கவனம் தேவை. முயற்சியில் இழுபறி உண்டானாலும் போராடி முடிப்பீர்கள். எதிர்பாலினர் நட்பில் எச்சரிக்கை அவசியம்.
இடபம் – முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பண வரவு திருப்தியாக இருக்கும்.
இழுபறியாக இருந்த செயல்கள் நிறைவேறும். எதிர்பார்த்த ஒன்று உங்களை வந்து சேரும்.
மிதுனம் – தொழிலில் புதிய உத்திகளைக் கையாள்வீர்கள். உறவினர் வழியில் நன்மைகள் அதிகரிக்கும். புதிய முயற்சி ஒன்று வெற்றியாகும். தொழிலில் போட்டியாளர்கள் விலகுவார்கள்.
கடகம் – தந்தை வழி உறவுகளால் உதவி கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத திருப்பத்தை சந்திப்பீர்கள். முயற்சியில் வெற்றிபெற திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் தனித்திறமை வெளிப்படும்.
சிம்மம் – எதிரிகளால் சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். செயல்களில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். மனதில் ஒருவித பயம் வந்துபோகும். எதிர்பார்த்தவற்றில் தடைகள் உண்டாகும்.
கன்னி – புதிய முயற்சி ஒன்றில் ஆதாயம் காண்பீர்கள். நட்புகளால் நன்மை உண்டு.
உங்கள் அணுகுமுறையால் செயலில் ஆதாயம் உண்டாகும். நன்மை அதிகரிக்கும்.
துலாம் – முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் போட்டியாளர்களால் உண்டான நெருக்கடி விலகும். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். நிறைவேறாமல் இருந்த ஒரு வேலை இன்று முடிவிற்கு வரும்.
விருச்சிகம் – உங்களுடன் நெருக்கமாக இருந்தவர்களின் வழியே, சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். செயல்கள் இழுபறியாகும். நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும்.
தனுசு – தேவையற்ற பயம் வந்து போகும். பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும்.
உங்கள் சந்தோஷத்திற்காக ஒரு செயலில் ஈடுபடுவீர்கள். நெருக்கமானவர்களின் ஆதரவு நன்மை தரும்.
மகரம் – இழுபறியாக இருந்த ஒரு செயல் நிறைவேறும். எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள். செயலில் இருந்த தடைகள் விலகும். உயர்ந்தோரின் நட்பினால் நீங்கள் நினைத்தது நிறைவேறும்.
கும்பம் – பேச்சில் நிதானம் தேவை. அவசரப்பட்டு யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். உங்கள் கவனக்குறைவால் சில இழப்புகள் உருவாகலாம். நிதானித்து செயல்படுங்கள்.
மீனம் – மனம் அலைபாயும். முக்கியமான ஒரு செயலில் முடிவிற்கு வர முடியாமல் போகும். பணியில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். பொறுப்புகளில் கூடுதல் கவனம் தேவை.
