இந்தியாவின் 74 வது குடியரசுதின நிகழ்வுகள் இன்று (26) யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது.
குடியரசு தின நிகழ்வில் யாழ். இந்தியத்துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனால் இந்திய நாட்டின் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு இந்திய குடியரசு தலைவரின் சிறப்புரையும், யாழ் இந்திய துணை தூதுவரால் வாசிக்கப்பட்டதோடு இந்திய காவல்படையினரால் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது.
