போதைக்கு அடிமையாக்கி 14 வயதுச் சிறுமி மூன்று வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – மூங்கிலாறு பகுதியிலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
மெல்ல கற்கும் குறித்த சிறுமி மூன்று மாதங்களாக பாடசாலைக்குச் செல்லவில்லை. இந்நிலையில் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் குறித்த சிறுமியின் வீட்டுக்குச் சென்று பாடசாலைக்கு செல்லாமைக்கான காரணம் தொடர்பில் விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.
அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையில், சிறுமி தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை மற்றும் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், சிறுமியின் இந்நிலமைக்கு காரணம் அவருடைய 19 வயதுடைய சகோதரன் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
போதைக்கு அடிமையான குறித்த சகோதரன் பணத்திற்காக தனது நண்பர்கள் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்துள்ளார். இந்நிலையில், குறித்த சிறுமி சகோதரனின் நண்பர்களால் மூன்று வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன், சிறுமியின் தந்தையும் கசிப்புக்கு அடிமையானவர் , தாய் வேலைக்குச் செல்வதாலும் குறித்த சிறுமி தனிமையில் வீட்டில் இருக்கும் சந்தர்ப்பங்களிலேயே அண்ணணின் உதவியுடன் சிறுமி பாலியல் துஷ்பிரோயகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செயவ்தற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
