கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் கிணற்றுக்குள் வீழ்ந்த செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (27) காலை இடம்பெற்றது. சம்பவத்தில் 24 வயதுடைய விவேகாநந்தன் வேணிலவன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட வீட்டு நாய் கிணற்றில் விழுந்துள்ளது. குறித்த நாயை மீட்பதற்காக குறித்த இளைஞன் கிணற்றில் தும்பு கயிறை பயன்படுத்தி இறங்கியுள்ளார்.
கயிறு அறுந்த நிலையில் கிணற்றுக்குள் இளைஞன் வீழ்ந்துள்ளார். மேல் ஏறி வர முடியாத நிலையில் இளைஞன் தத்தளித்துள்ளார்.
சேற்றில் புதைந்த நிலையில் மாட்டிக்கொண்டமையால் மேலே ஏறிவர முடியமால் இருந்துள்ளது. இந்த நிலையில் அயலவர்களின் உதவியுடன் நீர் இறைக்கப்பட்டு குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
