தீ விபத்தில் அநுராதபுரம் – அலையாபத்து – மாங்கடவளையில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாயொருவரும், இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு (26) நித்திரையில் உறங்கிக் கொண்டிருந்த அறையில் இவ்வாறு தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் ஐந்து வயது சிறுவனும், பத்து வயது சிறுமி ஒருவரும், 30 வயதுடைய தாயொருவருமே உயிரிழந்துள்ளனர்.
பிள்ளைகளையும், மனைவியையும் காப்பாற்றச் சென்ற 37 வயதுடைய கணவர், தீக்காயங்களுடன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அருகில் உள்ள வீடொன்றிலிருந்து குறித்த வீட்டுக்கு மின்சாரம் பெறப்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் கண்டறிய முடியவில்லை என்றும் அலையாபத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.
