கொடிகாமம் பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய தங்கவேலு மோகனச்சந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
வேட்டைக்காக கட்டுத்துவக்கை எடுத்துச் சென்றபோதே கட்டுத்துவக்கு வெடித்து படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மீட்டு கொண்டு சென்றனர்.
ஆயினும், ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
