யாழ்.மாவட்டத்தில் இன்று(27) வரை மூன்று தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்மராஜ் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம்வரை 3 தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக நடவடிக்கைக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்தார்.
