மேடம் – உங்கள் செயலில் நண்பர்கள் வழியே பிரச்னைகள் உருவாக வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம். மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். எதிர்பாலினரிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நன்மையாகும்.
இடபம் – எதிர்பாராத ஒரு செலவு உங்களைத் தடுமாற வைக்கும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீங்கள் விரும்பிய ஒன்றை அடைவீர்கள்.
மிதுனம் – பிறரால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். புதிய நட்புகளால் ஆதாயம் அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
கடகம் – முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத வருவாயால் நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். மகிழ்ச்சி கூடும்.
சிம்மம் – அரசு வழியிலான எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறும். எதிரிகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும்.
உடல் நிலையில் உண்டான பயம் விலகும். திட்டமிட்ட வேலையில் வெற்றி அடைவீர்கள்.
கன்னி – முயற்சியில் தடைகளை சந்திப்பீர்கள். பயணத்தில் சங்கடங்கள் நேரும். எதிர்பாராத ஒரு பிரச்னையை சந்திப்பீர்கள். பணம், நகை விஷயங்களில் கவனம் தேவை.
துலாம் – செயலில் இருந்த தடை விலகும். பெரியவர்களின் ஆதரவால் உங்கள் விருப்பம் நிறைவேறும். அரசு வழியிலான முயற்சியில் கூடுதல் கவனம் தேவை. நண்பர்கள் உதவி செய்வர்.
விருச்சிகம் – மனதில் புதிய நம்பிக்கை உருவாகும். குழந்தைகளின் எதிர்காலத்திற்குரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடத்துவதற்குரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
தனுசு – உங்களது கவனம் சிதறினால் சில இழப்புகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். கவனம் தேவை.
பணியிடத்தில் சில பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
மகரம் – அரசு வகையிலான வேலையில் கவனம் தேவை. நீங்கள் எதிர்பார்த்த நன்மையை காணமுடியாது. அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒன்றை அடைவதில் போராட்ட நிலையை சந்திப்பீர்கள்.
கும்பம் – முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். புதிய நம்பிக்கையுடன் உங்கள் செயல்பாடு ஆரம்பமாகும்.
திட்டமிட்ட செயலில் மாற்றம் செய்வீர்கள். யோசித்து செயல்பட்டு ஒரு வேலையில் வெற்றி அடைவீர்கள்.
மீனம் – வீண் செலவுகளால் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். பண விஷயத்தில் கவனம் அவசியம். உங்கள் வார்த்தைகளால் இன்று நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள். செலவுகள் குறித்து கவலை உண்டாகும்.
