பெற்ற மகளை பணத்திற்காக 15 விற்பனை செய்த தாய் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் மற்றும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 42, 45, 54 மற்றும் 84 வயதுடைய பாணந்துறை, கெசல்வத்த மற்றும் கோரக்கன பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி ஒருவரை பணத்திற்காக வயதானவர்களுக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் குழுவினர் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் பொலிஸ் விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், சிறுமியின் தாயை ஏமாற்றி பணம் கொடுத்து சிறுமியை விற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
