சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கத்தானைப் பகுதியில், வீதியைக் கடக்க முற்பட்ட நிலையில், ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில், நகைக்கடை உரிமையாளரான 38 வயதுடைய பிரதாப் என்பவரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர் சமிக்ஞை செய்து வீதியைக் கடக்க முற்பட்ட நிலையில், பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பில், சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
