மேடம் – உங்கள் எண்ணம் இன்று நிறைவேறும். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். திட்டமிட்ட ஒரு வேலை முடிவிற்கு வரும். மனம் மகிழக்கூடிய சம்பவம் நடைபெறும்.
இடபம் – செலவில் கவனம் தேவை. தவறான நபர்களின் நட்பினால் சில பிரச்னைகளை சந்திக்க நேரும். வரவை விட செலவு கூடும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும்.
மிதுனம் – எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். தடைபட்டிருந்த செயல்கள் நடந்தேறும்.
கடகம் – வியாபாரத்தை அபிவிருத்தி செய்வது குறித்து நண்பர்களிடம் பேசுவீர்கள்.
முயற்சிகளில் ஒன்று வெற்றியாகும். இழுபறியாக இருந்தவற்றில் மாற்றம் உண்டாகும்.
சிம்மம் – குடும்பப் பிரச்னையில் ஒரு முடிவிற்கு வர முடியாமல் தடுமாற்றம் அடைவீர்கள்.
பழைய பிரச்னை சங்கடப்படுத்தும். எந்தவொரு செயலிலும் ஈடுபாடு காட்ட முடியாமல் திணறுவீர்கள்.
கன்னி – எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும். உறவுகள் வழியிலும் சங்கடங்களை சந்திப்பீர்கள். அலைச்சல் அதிகரித்து உடல் சோர்வடையும். எதிர்பார்த்த ஆதாயத்தில் தடை உண்டாகும்.
துலாம் – நண்பர்கள் ஆதரவால் எண்ணம் நிறைவேறும். நினைத்ததை நினைத்தபடி சாதிப்பீர்கள். உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். தடைபட்டிருந்த முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
விருச்சிகம் – புதிய உற்சாகம் தோன்றும். விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். மறைமுக எதிர்ப்புகளை சரி செய்வீர்கள். புதிய முயற்சியை தள்ளி வைப்பீர்கள்.
தனுசு – எதிர்பார்த்த நன்மையை உங்களால் காண முடியாமல் போகும். யோசித்து செயல்பட வேண்டிய நாள். உறவினரிடம் பிரச்னைகள் ஏற்பட்டு சங்கடம் அடைவீர்கள். முயற்சிகள் இழுபறியாகும்.
மகரம் – வேலையில் கவனம் தேவை. நேர்மையான செயல்களில் நன்மை உண்டாகும். திட்டமிட்ட செயல் நிறைவேறாமல் போகும். முயற்சியில் குழப்ப நிலை உண்டாகும்.
கும்பம் – நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உங்கள் முயற்சிக்கு உதவியாக இருப்பார்கள். விரும்பியதை அடைவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். உறவினர் வீடு தேடி வருவர்.
மீனம் – தொழிலில் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும். வரவு செலவில் கவனம் தேவை. உற்சாகத்துடன் செயல்படுவீர்கள் என்றாலும் உங்கள் விருப்பம் நிறைவேறாமல் போகும்.
