திருகோணமலை புல்மோட்டை பகுதியில் காணி தகராறில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (29) இடம் பெற்றுள்ளது. புல்மோட்டை பம்ஹவுஸ் என்ற இடத்தில் விவசாய காணிக்குள் ஏற்பட்ட எல்லை பிரச்சினை காரணமாகவே இரு குழுக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அடிதடியாக மாறி கொலையில் முடிந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கைகலப்பில் புல்மோட்டை- 01 வட்டாரத்தைச் சேர்ந்த எஸ்.எம்.பதூர் (42வயது) மற்றும் புல்மோட்டை- நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த எம்.எம்.சலீம் (42வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, படுகாயம் அடைந்த நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த, சம்பவம் தொடர்பில் புல்மோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
