கிளிநொச்சியைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் எஸ்.என் .நிபோஜன் தெகிவளை பிரதேசத்தில் இன்று மாலை (30) இடம்பெற்ற புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காலிக்கு சென்று புகையிரதத்தில் திரும்பிக்கொண்டிருந்த சமயம் தெஹிவளையில் இந்த துரதிர்ஷ்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தெஹிவளை பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
