மேடம் – குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
இடபம் – மனதிற்குப் பிடித்தவற்றில் ஈடுபாடு கொள்வீர்கள். கோயில் வழிபாடு நன்மையளிக்கும்.
உடலும் மனமும் மகிழும் வகையில் இன்றைய பொழுது அமையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மிதுனம் – திடீர் செலவுகளை சந்திப்பீர்கள். நண்பர்கள் சிலரால் தவறான வழியில் செல்ல நேரும்.புதிய சிந்தனை மேலோங்கும். உங்கள் முயற்சி ஒன்றில் எதிர்மறையான பலன் உண்டாகும்.
கடகம் – முயற்சியில் வேகம் உண்டாகும். எதிர்பார்த்த வரவு உண்டு. சந்தோஷமான நிலை உருவாகும். தொழிலில் புதிய யுக்தியைக் கையாள்வீர்கள். புதிய நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
சிம்மம் – உங்கள் விருப்பங்கள் இன்று எளிதாக நிறைவேறும். அரசு வழியில் ஆதாயம் காண்பீர்கள். உங்கள் நீண்டநாள் விருப்பத்தில் ஒன்று நிறைவேறும். செயல்களில் நன்மைகளைக் காண்பீர்கள்.
கன்னி – நேற்று வரை இருந்த சங்கடம் இன்று விலகும். தடை பட்டிருந்த வருவாய் வந்து சேரும். நெருக்கடிகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் காண்பீர்கள்.
துலாம் – செயல்களில் நெருக்கடியை சந்திப்பீர்கள். எதிரிகளால் சில பிரச்னைகள் உருவாகும். எதிர்பாராத சங்கடங்களை சந்திப்பீர்கள். அந்நியரின் தொந்தரவால் உங்கள் மனம் அவதிப்படும்.
விருச்சிகம் – சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்னை விலகும். குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் இருந்த சங்கடங்கள் தீரும்.
தனுசு – இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். மறைமுகத் தொல்லைகள் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். செயல்களில் ஆதாயம் உண்டாகும்.
மகரம் – உங்கள் மனம் ஓய்வை விரும்பினாலும், அவசர வேலைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். தாய் வழி உறவுகளால் உண்டான சங்கடங்கள் விலகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
கும்பம் – மனதில் தேவையற்ற சிந்தனை உண்டாகும். செயலில் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாது. உங்களின் முயற்சி, எண்ணம் வெற்றியாகும். நீண்டநாள் எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறும்.
மீனம் – உங்கள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தினர் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
சகோதரர்கள் உதவியுடன் செயலில் வெற்றி காண்பீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும்.
