புகையிரத விபத்தில் நேற்று உயிரிழந்த ஊடகவியலாளர் எஸ். என். நிபோஜனுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (31) அஞ்சலி செலுத்தினர்.
வடக்கு – கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் 2171வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, அன்னாரின் உருவப்படத்திற்கு தீபமேற்றியும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
