அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான புகையிரதப் பாதையின் அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் 05 மாதங்களில் பூர்த்தி செய்யப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது,
“அநூராதபுரத்திலிருந்து வவுனியா வரையான வடக்கு புகையிரதப் பகுதியின் அபிவிருத்திப் பணிகள் கடந்த 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் இந்த வருடத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டம் இதுவாகும்” எனத் தெரிவித்தார்.
