மேடம் – வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி நிறைவேறும். நண்பர்கள் உதவியால் நன்மை அடைவீர்கள். பண வரவில் உண்டான தடைகள் விலகும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.
இடபம் – கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கவனமுடன் செயல்படுவது நன்மையாகும்.
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
மிதுனம் – மனதில் குழப்பமும் செயலில் தடுமாற்றமும் ஏற்படும். நிதானித்து செயல்படவும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியை நிறைவேற்ற முடியாமல் இன்று சங்கடப்படுவீர்கள்.
கடகம் – குடும்பத்தின் தேவைக்காக வீட்டில் உள்ள பொருட்களை விற்பனை செய்து சமாளிப்பீர்கள். புதிய முயற்சிகள் இன்று பலன் தராமல் போகும். வழக்கமான செயல்களிலும் நிதானம் தேவை.
சிம்மம் – புதிய முயற்சி பலன் அளிக்கும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். சிலருக்கு புதிய வேலை அமையும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும்.
கன்னி – எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர்கள். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும்.
துலாம் – பணியிடத்தில் உண்டான பிரச்னைகளை சரி செய்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். மனக்குழப்பம் அதிகரிக்கும். முயற்சிகளில் இழுபறியும் தாமதமும் ஏற்படும்.
விருச்சிகம் – செயல்களில் சங்கடங்கள் தோன்றும். புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது நன்மையாகும். பிரச்னைகள் இன்று உங்களைத் தேடி வரும். யாரிடமும் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.
தனுசு – உங்கள் கனவுகள் நிறைவேறும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் வெற்றியாகும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்படுவீர்கள்.
மகரம் – கடவுளின் அருளால் எதிர்ப்புகள் விலகும். செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர்கள். கேள்விக்குறியாகவே இருந்த ஒரு முயற்சி இன்று உங்களுக்கு சாதகமாகும். வருமானம் அதிகரிக்கும்.
கும்பம் – குடும்ப உறவுகளிடம் மனக்கசப்பு ஏற்படும். அனுசரித்துச் செல்வது நன்மையாகும். பிள்ளைகளால் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.
மீனம் – பணியில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் சங்கடங்கள் உண்டாகும். பணியாளர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். மேலதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாவீர்கள்.
