தென்மேற்கு வங்களா விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு கிழக்கே 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த தாழமுக்கம் மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று (01) காலை இலங்கையின் கிழக்கு கடற்கரையை அண்மிக்கும் என கூறப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லி மீற்றர் அளவான மிகப்பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கு அதிகளவான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
