யாழ்.மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 118.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.
நேற்றுக் காலை முதல் இன்று காலை வரையான 24 மணித்தியாலங்களுக்குள் 118.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
தற்போது வடமாகாணத்தில் பல பகுதிகளில் பெய்துவரும் மழை நாளை வரை தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
