மேடம் – மற்றவர்கள் வேலையில் தலையிட்டு ஆலோசனைகள் கூற வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். செயல்களில் இழுபறி இருக்கும்.
இடபம் – நீங்கள் விரும்பியதை அடைவீர்கள். உங்கள் முயற்சி இலாபமாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நன்மைகள் அதிகரிக்கும்.
மிதுனம் – நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். எதிரிகள் உங்களிடம் சரணடைவர். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்களை சமாளித்து நன்மை காண்பீர்கள். உங்கள் திறமை வெளிப்படும்.
கடகம் – பிள்ளைகள் நலன் குறித்த முயற்சியில் இறங்குவீர்கள். நிதிநிலை உங்களுக்கு சாதகமாகும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். யோகமான நாள். மகிழ்ச்சி கூடும்.
சிம்மம் – திடீர் பயணமும் சங்கடமும் உண்டாகும் என்றாலும், அதனால் லாப நிலை ஏற்படும். நீங்கள் சந்திக்க நினைத்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நண்பரிடம் உண்டான பிரச்னைகள் தீரும்.
கன்னி – எதிர்கால வாழ்க்கையை நினைத்து தைரியமான ஒரு முடிவை எடுப்பீர்கள். புதிய வரன் தேடி வரும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டு. உங்கள் திறமை வெளிப்படும்.
துலாம் – இழுபறியாக இருந்த வேலை முடியும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்னை தீரும். தொழிலில் எதிர்பார்த்த வருவாய் உண்டாகும். உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள்.
விருச்சிகம் – எளிதாக முடிய வேண்டிய வேலைகளையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களிடம் வழக்கமான போக்கு இல்லாமல் போகும்.
தனுசு – அலைச்சல் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் மனஸ்தாபம் ஏற்படும். நிதானம் தேவை. மறைமுக பிரச்னைகள் தொல்லைகளை ஏற்படுத்தும். எதிர்பார்த்தவற்றில் தடைகள் உண்டாகும்.
மகரம் – விவேகத்துடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவினை வைத்து பழைய கடன்களை அடைப்பீர்கள். உங்கள் செயல்கள் வெற்றியை ஏற்படுத்தும்.
கும்பம் – வியாபாரத்தில் புதிய அணுகுமுறைகளைக் கையாள்வீர்கள். உங்கள் முயற்சி இலாபத்தை உண்டாக்கும்.
எதிர்பார்த்த பணம் இன்று உங்கள் கைக்கு வரும். மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர்கள்.
மீனம் – வராமல் தடைபட்டிருந்த பணம் இன்று உங்கள் கைக்கு வரும். குடும்ப பிரச்னை தீரும்.
வியாபாரத்தில் ஏற்பட்ட தேக்க நிலை விலகும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவடைவீர்கள்.
