பருத்தித்துறை – திக்கம் பகுதியில் உள்ள வீடொன்றில் உட்புகுந்த முகமூடி கொள்ளைக் கும்பல் ஆயுத முனையில் மிரட்டி 20 பவுண் தங்க நகைகளைப் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் பதிவாகியுள்ளது. அதிகாலையில் கதவை உடைத்து வீட்டுக்குள் உள்நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இச்சமபவம் தொடர்பில், பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
