மின்வெட்டு தொடர்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நாளை (03) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை மின்வெட்டை மேற்க்கொள்ள மாட்டோம் என இலங்கை மின்சார சபை நீதிமன்றில் இன்று (02) அறிவித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்திருந்தது.
ஜனவரி 23 முதல் பெப்ரவரி வரையான உயர்தரப்பரீட்சைக் காலப்பகுதியில், மின்வெட்டை அமுல்படுத்துவது இல்லையென மனித உரிமை ஆணைக்குழுவில் எட்டப்பட்ட தீர்மானத்தை பிரதிவாதிகள் மீறியுள்ளதாக நீதிமன்றத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாளை இது தொடர்பான விசாரணை இடம்பெறும் வரையும் மின்வெட்டை மேற்க்கொள்ள மாட்டோம் என இலங்கை மின்சாரசபை நீதிமன்றத்தில் அறிவித்தது.
