நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத்தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல் பிரச்சாரங்களை மேற்க்கொள்ளாது என பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவில்லை என எதிர்க்கட்சிகள் கூறிவருகிறார்கள்.
நாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரசார முறைகளை பின்பற்றி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.
குறிப்பாக தேர்தல் செலவீனங்களைக் குறைக்கப் பிரசாரங்களையும் குறைத்துள்ளோம்” என்றார்.
