தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற ஜே.வி.பியின் வேட்பாளர் ஒருவரின் முகத்தில் கத்தியால் குத்திய சம்பவம் நேற்று (02) பதிவாகியது.
கல்கமுவ பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்று இரவு வீடு வீடாகச் சென்று ஜே.வி.பி கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
“ஒரு வீட்டுக்குச்சென்ற போது, அந்த நபர் 1988, 1989 ஆம் நடந்த சம்பவங்களை கதைத்து எம்மைத் திட்டினார். அந்தநபர் வேட்பாளரின் கழுத்தைப் பிடித்து இழுத்த போது வேட்பாளர் அதில் இருந்து மீள்வதற்காக அவரை பிடித்து தள்ளிவிட அவர் கீழே வீழ்ந்து விட்டார். அதன் பிறகு நாங்கள் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்து வேட்பாளரின் முகத்தில் கத்தியால் குத்தினார்” என வேட்பாளருடன் சென்றவர் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்க்கொண்டு வருகின்றனர்.
