வடக்கு – கிழக்கு தமிழர் பகுதிகளில் இன்று (04) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் , மற்றும் கிழக்கு மாகாண பல்கலைக்கழக மாணவர்களின் அழைப்பின் பேரிலேயே ஹர்த்தால் இடம்பெறுகிறது.
இன்று நாட்டின் 75 வது சுதந்திரதினமாகும். இந்நாளை கரிநாளாக கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியே யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஹர்த்தாலுக்கு வர்த்தக சங்கங்கள், அரசியல் கட்சிகள் எனப்பலதரப்பட்டவர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர்.
