மேடம் – புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். இழுபறியாக இருந்த செயல் ஒன்று நிறைவேறும். எதிர்பார்த்தவற்றில் நன்மை உண்டு.
இடபம் – குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம். உங்கள் அணுகுமுறைகளை மற்றவர்கள் பாராட்டுவார்கள்.
மிதுனம் – மனதில் குழப்பம் அதிகரிக்கும். எதிலும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் போகும். வேலைப் பளு அதிகரிக்கும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போகும்.
கடகம் – வரவை விட செலவுகள் அதிகரிக்கும். செயல்களில் கவனம் தேவை. வெளியூர் பயணம் செல்வீர்கள். அதனால் அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். வழக்கு இழுபறியாகும்.
சிம்மம் – பொருளாதார நெருக்கடி அகலும். வராமல் இருந்த பணம் இன்று உங்கள் கைக்கு வரும். உங்களுக்குப் பிரியமானவரை சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும்.
கன்னி – வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றிபெறும். நண்பர்கள் உதவியுடன் நினைத்ததை அடைவீர்கள்.
துலாம் – இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகும். உங்கள் செயல்களில் தெளிவு உண்டாகும். யோசித்து செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். தடைகள் விலகும்.
விருச்சிகம் – விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல்களில் சங்கடங்களை சந்திப்பீர்கள்.
வாகனப் பயணத்தில் கவனம் தேவை. எதிர்பாராத துன்பங்களை இன்று சந்திக்க நேரும்.
தனுசு – மனம் மகிழும்படியான சம்பவங்கள் இன்று நடைபெறும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். நண்பர்கள் உதவியுடன் ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மகரம் – எதிர்ப்புகள் அகலும். சுறு சுறுப்பாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உங்கள் தனித்தன்மை இன்று வெளிப்படும். தடைபட்டிருந்த செயல்களை நிறைவேற்றி முடிப்பீர்கள்.
கும்பம் – உறவினர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். வரவு திருப்தியாகும். உங்களது முயற்சி ஒன்று நிறைவேறும். நிதிநிலை உயரும்.
மீனம் – நிதானித்து செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். குடும்ப உறவுகளால் டென்ஷன் அதிகரிக்கும். நண்பரின் ஆதரவு உங்கள் சங்கடத்தை அகற்றும்.
