மேடம் – செயல்களில் வெற்றி காண்பீர்கள் என்றாலும், உழைப்பு அதிகரிக்கும். முயற்சியில் இழுபறி உண்டாகும். சொத்து விவகாரத்தில் சங்கடங்களை சந்திப்பீர்கள்.
இடபம் – தடைகளை சந்தித்தாலும் உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள்.
மிதுனம் – செயல்களில் நெருக்கடி தோன்றும். சிந்தித்து செயல்படுவதின் மூலம் இழப்புகளைத் தவிர்க்கலாம்.
தொழில் வழியில் எதிர்பார்த்த லாபம் இழுபறியாகும். புதிய முதலீடுகள் இன்று வேண்டாம்.
கடகம் – புதிய முயற்சிகள் வெற்றியாகும். நீண்ட நாட்களாக நீங்கள் முயற்சித்தது நிறைவேறும். உங்கள் பேச்சாற்றலால் வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். விஐபிகள் ஆதரவு லாபம் தரும்.
சிம்மம் – செலவுகள் அதிகரிக்கும். இருப்பதைக் கொண்டு முயற்சியை மேற்கொள்வீர்கள். குடும்பத்திற்காக செலவுகள் அதிகரிக்கும். மனை, வாகனம் வாங்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவீர்கள்.
கன்னி – எதிர்பார்த்த வரவு வந்து சேரும். திருமண வயதினருக்கு வரன் தேடிவரும்.
வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். சொத்து வாங்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவீர்கள்.
துலாம் – குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். புதிய வேலைக்குரிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மறைமுகத் தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வர். பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.
விருச்சிகம் – இரண்டு நாட்களாக இருந்த சங்கடங்கள் விலகும். செயல்கள் வெற்றியாகும்.
மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுவீர்கள்.
தனுசு – செயல்களில் குழப்பம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த ஒன்றில் இழுபறி உண்டாகும்.
பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுத்து, உங்களை சங்கடத்திற்கு ஆளாக்கும்.
மகரம் – நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தினருடன் ஒற்றுமை உண்டாகும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடந்தேறும். எதிர்பார்த்திருந்த ஒன்றை அடைவீர்கள்.
கும்பம் – தடைகள் விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும். நினைத்ததை சாதிப்பீர்கள்.
உங்கள் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிரிகள் விலகிச் செல்வார்கள்.
மீனம் – பணியிடத்தில் நெருக்கடி இருந்தாலும், நீங்கள் எதிர்பார்த்தது வெற்றியாகும். பண வரவு உண்டு. வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் மாற்றுப் பணிக்கு செல்ல வேண்டியதாக இருக்கும்.
