யாழ்ப்பாணத்தில் புதுமணத் தம்பதிகள், நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் தாலி கட்டி புது வாழ்வை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (03) இடம்பெற்றது. தமிழ் மீதும் தமிழர்களது தியாகத்தின் மீதும் அவர்கள் கொண்ட பற்றினால் இவ்வாறு திருமணம் செய்து கொண்டதாக புது தம்பதிகள் தெரிவித்தனர்.
விவேகானந்தா தமிழ்ஈசன் அவர்களும் போசிந்தா அவர்களும் இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். தமிழ்ஈசன் அவர்கள் தனியார் துறை ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார்.
