மேடம் – புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். தாய்வழி உறவுகளின் மூலம் உதவி கிடைக்கும். மனம் விரும்பும் வகையில் செயல்படுவீர்கள். உங்கள் செயல் ஆதாயம் தரும். நிதிநிலை உயரும்.
இடபம் – நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். குடும்பத்தினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். வீடு, மனை வாங்கும் சிந்தனை உண்டாகும்.
மிதுனம் – செயல்களில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். புதிய சொத்து வாங்கும் முயற்சி தள்ளிப்போகும். நீண்ட நாள் எண்ணம் ஒன்று பூர்த்தியாகும்.
கடகம் – நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். தந்தை வழி உறவினரால் உங்கள் முயற்சி நிறைவேறும்.
சிம்மம் – எதிர்பார்த்தவை நடந்தேறும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் வந்து சேரும்.
நெருக்கடிகளில் இருந்து மீள்வீர்கள். மனதிற்கினிய சம்பவத்தால் மகிழ்ச்சி காண்பீர்கள்.
கன்னி – நண்பர்கள் உதவி நன்மை தரும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
உங்கள் முயற்சி ஒன்றில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாலினரின் உதவி நன்மை தரும்.
துலாம் – இழுபறியாக இருந்த வேலை முடியும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்னை தீரும். தொழிலில் எதிர்பார்த்த வருவாய் உண்டாகும். உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள்.
விருச்சிகம் – உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். எதிர்பார்த்த வருவாய் வரும். நன்மையான நாள்.
உங்கள் எண்ணம் நிறைவேறும். குழந்தைகளின் எதிர்காலத்திற்குரிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
தனுசு – நீங்கள் நினைப்பதற்கு மாறாக சில செயல்கள் நடைபெறும். எதிரிகளின் கை மேலோங்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்க தாமதமாகும்.
மகரம் – மாலை வரை நண்பரின் ஆதரவால் நினைத்ததை அடைவீர்கள். அதன்பின் சங்கடம் தோன்றும். குழப்பங்கள் விலகும். உங்களுக்கு எதிரானவர்களை அடையாளம் காண்பீர்கள்.
கும்பம் – செயல்களில் வெற்றி காண்பீர்கள். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும்.
வாழ்க்கைத் துணையின் வழியே உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிரிகளின் செயல்களை முறியடிப்பீர்கள்.
மீனம் – அவசர வேலைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். மேலதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாவீர்கள். வேலைப்பளுவால் உடலும் மனமும் சோர்வடையும்.
